Product Detail

இன்று நான் என் தேவனுடன் – – தினசரி தியான புத்தகம் 2025

250.00

இன்று நான் என் தேவனுடன்

தினசரி தியானநூல். நேற்று என்பது கடந்து போய் விட்டது. நாளை என்பது இன்னும் நாம் காணாதது. இன்று என்பது மட்டுமே நாம் இப்போது காண்பது. நேற்றைய நினைவுகளின் பாரமும் நாளைய தினத்தைக் குறித்த கவலையும் நம்மை பாரப்படுத்தி இன்றைய நம்முடைய பயணத்தின் வேகத்தை குறைக்கக் கூடாது. இன்று நான் என் தேவனுட என்ற இந்த தீனசரி தியான நூல் இன்று நம்முடைய பயணத்தில் வெற்றியாக நாம் முன்னோக்கி செல்ல தேவையான தெய்வீக வல்லமையை நாம் பெறுவதற்கு தேவையா புதிய புதிய சிந்தனைகளை வழங்குகிறது. யார் யார் நம்முடன் இருக்கின்றார்கள். யார் யார் நமக்கு ஆதரவாயிருக்கின்றார்கள் என்று பார்ப்பதைவிட இன்று தேவன் நம்மோடு இருக்கின்றார். அவர் இன்றைய தின சூழ்நிலைக்கு நமக்கு போதுமானவராயிருப்பார் என்ற நம்பிக்யைான மனநிலையே முக்கியமானது. இந்த தீயான நூலில் இடம்பெற்றுள்ள தேவ வார்த்தை சார்ந்த சிந்தனைகள் இந்த நம்பிக்கையோடும் தைரியத்தோடும் ஒவ்வொருநாள் சூழ்நிலைகளையும் சந்திக்க உங்களுக்கு மிகச் சிறந்த தூண்டுதலையும் உத்வேகத்தையும் தரும்.

ஆசிரியரை பற்றி

மிகச்சிறந்த அறுபது ஆவிக்குரிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிட்டு வரும் தினசரி தியான நூல்கள் பல்லாயிரங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலை கொடுத்து வருகின்றன. மும்பை நியூ லா காலேஜில் சட்டம் பயின்று பட்டம் பெற்ற இவர் வாலிப நாட்களில் காண நேரிட்ட மிகுந்த போராட்டங்களால் திசை திரும்பி போய் இறுதியில் இயேசுவின் அன்பின் ஐக்கியத்தில் தஞ்சம் புகுந்தார். 13 ஆண்டுகள் புதுச்சேரியில் தனித்து விடப்பட்டாலும் கர்த்தருடன் நெருங்கி வாழும் வாய்ப்பை பெற்ற பல்லாயிரங்களுக்கு கர்த்தருடைய வழிகளை மிக மிக தெளிவாக போதித்து நடத்தும் இறைப்பணியாளராக மாறினார். இறையியல் கல்வி சாலைகள் எதுவும் செல்லாத இவர் தேவனோடு சேர்ந்து நடந்த அனுபவத்தின் விளைவாக பெற்ற இறை அறிவால் இன்று தனித்துவத்தோடு இதுதான் கிறிஸ்தவம் இதுதான் கிறிஸ்துவின் வழி என்று ஆணித்தரமாக பிரசங்கித்தும் எழுதியும் வருகிறார். மாதந்தோறும் ஜீவநீரோடை என்ற மாத இதழை வெளியிட்டு வரும் இவர் சமூக ஊடகங்கள் வழியாக பல்லாயிரங்களுக்கு தினமும் தேவ வழிகளை போதிக்கின்றார்.

LANGUAGE

TAMIL