Burn & Shine
0
Currently Empty: ₹0.00
இவரைப் பற்றி சில வரிகள்…
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். என்றார் ஆண்டவராகிய இயேசு. ஆனால் இந்த சத்தியத்தை சரியாக அறியாமலே பிறருக்கு அறிவிக்க முந்துவதால் சத்தியம் சாராத தவறான உபதேசங்கள் பெருகி போய்விட்டன. சத்தியம் சாராத உபதேசங்களைக் கேட்கும் ஜனங்களால் சத்தியத்திற்கு ஏற்றபடி வாழ இயலவில்லை. எனவே கிறிஸ்தவ வெளிச்சம் போதிய அளவில் பிரகாசிக்கவில்லை.
கர்த்தரால் விசேஷமாக அழைக்கப்பட்டு கர்த்தருடைய சத்தியத்தை தெளிவாக அறிந்துக்கொள்ளும்படி வழி நடத்தப்பட்டவர் சகோ.சாம்சன்பால். பலவிதமான சோதனையானப் பாதைகள் வழியாக நடக்க நேரிட்ட இவர் தேவஉறவு, தேவ ஐக்கியம் ஆகியவைகள்தான் ஆவிக்குரிய வாழ்க்கையின் அடிப்படைகள் என்பதை தெளிவாக அறிந்துகொண்டார்.
கார்த்தரின் வார்த்தைகள் பிரசங்கிப்பதற்கும், கேட்பதற்கும் மட்டும் அல்ல. அவைகள் வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டும். வார்த்தைகளின்படி வாழும்போதுதான் ஆசீர்வாதங்களைப் பெறமுடியும். இந்த சத்தியத்தினை மையமாகக் கொண்டு செயல்படும் சகோ.சாம்சன்பால் சிறந்த கிறிஸ்தவ பேச்சாளர் மட்டுமின்றி, நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உரமுட்டும் சிறந்த உண்மைகளை வெளிக்கொணரும் எழுத்தாளராகவும், கர்த்தரால் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இவருடைய கிறிஸ்தவ சிந்தனைகளும், சத்தியம் சாரம் நிறைந்த உயர்ந்த கருத்துக்களும் ஆயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் ஆவிக்குரிய அனலை மூட்டுகின்றன.
பல ஆண்டுகளாக இவர் தொடர்ந்து வெளியிடும் தினசரி தியான நூல்களும், மாதந்தோறும் வெளியிடும் மாத இதழ்களும் பல்வேறு தலைப்புகளில் வெளியிடும் ஆவிக்குரிய புத்தகங்களும் சத்தியத்தை விட்டு சற்றும் விலகாத தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளராக ஆயிரக்கணக்காணோருக்கு இவரை அடையாளங்காட்டுகின்றன. கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தைகளை பிரசங்கிப்பவர்களும், பேசுகிறவர்களும் குறைந்துபோய், வியாபார ரீதியான ஊழியங்கள் பெருகிப்போன இந்த நாட்களில் சகோ. சாம்சன்பால் மூலமாக கர்த்தர்பேசுகின்ற வார்த்தைகளும் வெளிப்படுத்துகின்ற உண்மைகளும் அநேகருக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளன. தொலைகாட்சி நிகழ்சிகள் வாயிலாகவும், YOUTUBE செய்திகள் வாயிலாகவும் உலகமெங்கிலும் அநேகர்கர்த்தருடைய தெளிவான ஓசையினை இவர்மூலம்; கேட்கின்றனர் என்பது உண்மை.