Product Detail

வலிமையான நம்பிக்கைகள்

70.00

Categories: ,
Language: Tamil

நம்பிக்கை என்பது இருள் நிறைந்த ஒரு பாதையில் வெற்றியாக தொடர்வதற்கு உதவிபுரிகின்ற விளக்கு போன்றது . வாழ்க்கையில் எதை இழந்தாலும் நம்பிக்கை என்பது இழந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டியது. நம்பிக்கை என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டதாயிராமல் தேவ உறவினால் நமக்குள் உருவானதாக இருக்க வேண்டும். நாமே உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கை வாழ்க்கையின் எல்லா எதிர்மாறான சூழல்களிலும் நம்மைத் தாங்குவதற்குப் போதுமானதல்ல. தேவனோடு நல்லதோர் ஐக்கியத்தில் நாம் வாழவேண்டும். தேவனோடிய நல்வழிகளில் நாம் நடந்து பழக வேண்டும். அப்போது நமக்குள் இறை உறவு சார்ந்த நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கையின் ஆற்றல் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் நம்முடைய வாழ்க்கையை அர்த்தம் மிகுந்ததாக்கும். எதனாலும் வீழ்த்தப்பட இயலாததாகவும் மாற்றிவிடும். அவ்விதமானதோர் உயர் அனுபவத்திற்கு இந்த நூல் உதவியாயிருக்கும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.