இந்த நாளிலும் என்னோடிருந்து – தினசரி தியான புத்தகம் 2024
₹220.00
இந்த நாளிலும் என்னோடிருந்து
தினசரி தியானநூல். வாழ்க்கை என்னும் நெடும் பயணத்தில் விதவிதமான சூழ்நிலைகளை நாம் காண நேரிடுவதுண்டு. எல்லா சூழ் நிலைகளிலும் நம்முடைய மனதுக்கு ஆதரவு தரும் சிலரை நம்மோடு நாம் பார்ப்பது நிச்சயமற்ற காரியம். நலமான நாட்களிலும் ந லமற்ற நாட்களிலும் நம்மோடிருந்து நம்மை முன்னோக்கி நடத்தி செல்ல இயன்றவர் கர்த்தர் மட்டுமே. அவரை எந்த சூழ்நிலையிலு ம் நம்மோடிருந்து நம்மை நடத்தி செல்லுகின்றவராக நாம் பார்க்க முடியும். அந்த நம்பிக்கையை நமக்குள் நிலைப்படுத்தி நம்மை உற்சாகப்படுத்துவது தேவ வார்த்தைகளே. அந்த தேவ வார்த்தை களின் குவியல்தான் இந்த நாளிலும் என்னோடிருந்து என்ற இந்த புதிய தினசரி தியான நூல், ஒவ்வொரு நாளுக்காகவும் தரப்பட்டு ள்ள சிந்தனைகள் இந்த நாளிலும் கர்த்தர் நம்மோடிருக்கின்றார் என்ற நம்பிக்கையை தருவதோடு அதற்கேற்றவிதமாக நாம் சரிய வாக செயல்படவும் நம்மை வழிநடத்தும்.
ஆசிரியரை பற்றி
இதுவரையிலும் மிகச்சிறந்த சுமார் அறுபது புத்தகங்களை வெளியிட்டு பல்லாயிரங்களுக்கு பயனுள்ள ஊழியராக விளங்கும் சகே . சாம்சன் பால் சத்தியத்தின் அடிப்படைகளை மிகச்சரியாக புரிந்து கொண்டு போதிக்கின்றவர். தேவனுடைய தெளிவான நடத்துதலோடு இவர் எழுதி வெளியிட்ட தினசரி தியானநூல்கள் பல்லாயிரங்களால் விரும்பி வாசி க்கப்பட்டுள்ளன. அனுதின வாழ்க்கை சூழ்நிலைகளை தேவதுணையோடு சந்திக்க உதவுகின்ற இவருடைய தினசரி தியானநூல்கள் தனித்துவம் வாய்ந்ததாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு உதவுகிறதாகவும் உள்ளது. மாதந்தோறும் ஜீவநீரோடை என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகின்றார்.
LANGUAGE | TAMIL |
---|